tamilnadu

img

கோவாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு...  இன்று முதல் ஊரடங்கு.... 

பனாஜி
சுற்றுலாவிற்கு பிரசித்திபெற்ற மாநிலமான கோவாவில் தற்போது கொரோனா தீவிரமான வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை அங்கு 2 ஆயிரத்துக்கும் 700 கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் பலியாகியுள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று (புதன்)  இரவு 8 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை 26 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மேலும் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.  மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு தளர்வு உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். 

;