tamilnadu

img

கொரோனா ஊரடங்கு.... தள்ளுவண்டியில் உயிரை விட்ட நோயாளி

கோட்டா:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சதீஷ் அகர்வால். இவர் கோட்டாவில் உள்ள ராம்புரா பகுதியில் உள்ள பைத்தகாடியில் வசித்து வந்தார். ஆஸ்துமாவால் கடுமையாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் கொண்டுவருமாறு கேட்டுள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் அவரை கைவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சதீஷ் அகர்வாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் மணீஷ் கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு எனது தந்தை ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பல முறை ஆம்புலன்ஸை அழைத்தும் வரவில்லை, ஒரே ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வர சம்மதித்தது. ஆனால் நான் எனது தந்தையை அவர் காய்கறி விற்கும் கைவண்டியிலேயே அழைத்துச் சென்றேன். இரண்டரை கிலோ மீட்டர் தூரமுள்ள மருத்துவமனைக்கு கைவண்டி செல்ல காவல்துறையினர் சாலைத் தடுப்புகளை அகற்றி உதவினர். அவர்கள் கூட தங்கள் வாகனத்தைத் தரவில்லை என்றார்.

மருத்துவமனை அதிகாரி டாக்டர் நவீன் சக்சேனா மணீஷின் புகாரை மறுத்தார். சதீஷ் அகர்வால் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பாட்டார், மருத்துவர்கள் அவரை உடனடியாகச் சோதனை செய்தோம் அவர் ஏற்கெனவே இறந்திருந்தார் என்றார். அவர்கள் கேட்ட போது ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இல்லை என்றும் கூறினார்.கோட்டா வட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சைஷினி கூறுகையில், "காவல்துறையினர் உதவவில்லை என்று சொல்வது கற்பனையானது. அப்பகுதியில் உள்ள காவல்துறையினரிடம் எந்த ஒரு வாகனமோ ஆம்புலன்சோ இல்லை என்றார்.

;