tamilnadu

img

காய்கறி தள்ளுவண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் விரைந்து சென்ற கார்

திருப்பூர், ஜூலை 1 - திருப்பூரில் காய்கறி விற் பனை செய்யும் தள்ளுவண்டி மீது மோதிய கார் ஒன்று நிற் காமல் விரைந்து சென்ற சிசிடிவி காட்சி சமூக வலை தளத்தில் வைரலாகப் பரவி யுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் சர்மா (வயது 39). இவர் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பியூசிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவருக்கு பியூசிங் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள சந்தை யில் காய்கறிகள் மற்றும் தேங்காய் ஆகி யவற்றை மொத்தமாக வாங்கி தள்ளு வண்டி மூலம் வீதிகளில் சென்று வீடு வீடாகச் சில்லரை வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எஸ்.வி.காலனி பகுதியில் தள்ளுவண்டியுடன் காய்கறிகள் விற்பனை செய்து கொண்டி ருந்தார். அப்போது அந்த சாலையில் எதிரே வந்த மாருதி கார் ஒன்று நேருக்கு நேராக மோதியது. இதில் தள்ளுவண்டி கவிழ்ந்ததுடன், திலீப்பும் நிலைகுலைந்து கீழே விழுந்தார். எனினும் அந்த கார் நிற்காமல் அப்பகுதியைக் கடந்து விரைந்து சென்றது.

இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த மக்கள் திலீப் சர்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது பதிவான சி.சி.டிவி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

;