tamilnadu

img

பிராமணர்கள்  பிறப்பால் உயர்ந்தவர்களாம்-மக்களவை சபாநாயகர் புதிய கண்டுபிடிப்பு

பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று மக்களவை சபாநாயகர் சட்டத்திற்கு புறம்பாக பிராமண மகாசபை கூட்டத்தில் பேசி உள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிறன்று அகில இந்திய பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வர்ணாசிரமக் கொள்கையை தூக்கி பிடித்து பேசி இருப்பது பெரும் அதிர்ச்சிசையை ஏற்படுத்தி உள்ளது.அவர் கூறியதாவது. 
மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான். இன்று கூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும் கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களை விட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர் என்று கூறியிருந்தார்.
மேலும் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கூட அவர் இதே கருத்து கூறியிருந்தார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சிற்கு சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஜராத் சட்ட மன்ற  உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி வலியுறுத்தி உள்ளார். 
 

;