tamilnadu

img

கூட்டுறவு சங்க  நிர்வாகிகள் தேர்வு 

 பொன்னமராவதி, செப்.22-  புதுக்கோட்டை வட்ட எம்.எம்.593 மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 10 ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 17 ஆம் தேதி சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பொன்னமராவதி அதிமுக ஒன்றியச் செயலாளர் ராம.பழனியாண்டி மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றியக்குழு நிர்வாகத் தலைவராக பதவியேற்றார். துணைத் தலைவராக களமாவூர் பாலசுப்பிரமணியன், இயக்குநர் திருவப்பூர் முத்து உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

;