tamilnadu

img

என்ஆர்சிக்கு எதிராக பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பாட்னா:
பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அந்த மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி ஆளும் பீகார் மாநிலத்திலேயே என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றக் கூட்டம் பிப்ரவரி 25 செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, என்ஆர்சி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம். என்பிஆர் திட்டத்தை 2010-ம் ஆண்டுசரத்து படியே அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து ‘சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை’ தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியஅரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;