tamilnadu

img

அமெரிக்காவை புரட்டியெடுத்த ஹன்னா புயல்... 

டெக்சாஸ் 
வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரவில்லை. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஐரோப்பா நாடுகள் கூட 80% கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அமெரிக்கா கடந்த 4 மாதங்களாக போராடியும் 10% கூட கொரோனா கட்டுக்குள் வரவில்லை. மாறாக தினசரி பாதிப்பு புதிய உச்சமாக 61 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதனால் அந்நாட்டு அம்மக்கள் கடும் அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் உள்ளனர்.

கொரோனா பதற்றத்துக்கு இடையே அமெரிக்க மக்களுக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது "ஹன்னா" என்னும் வலிமை வாய்ந்த புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை நேற்று (திங்கள்) ஒரு புரட்டு புரட்டியெடுத்து விட்டது. 

இந்த புயலால் வீடுகளின் மேற்பகுதி காற்றிலும், கீழ்ப்பகுதி வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டன. மேலும் கடல்நீர் வேறு சில இடங்களில் உள்புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த புயலால் உயிர்சேதம் பற்றிய முழுவிபரம் இல்லை என்றாலும், 125 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.   

;