tamilnadu

img

வீட்டிலும் முக கவசம், தனிமனித இடைவெளி அவசியம்...

திருவனந்தபுரம்:
வீட்டை விட்டு வெளியே செல்வோர் வீடுதிரும்பிய பிறகும் கூட முகமூடி அணிந்து தனிமனித இடைவெளி பராமரிக்க தயாராக இருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

சனியன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கிளஸ்டர்களில் நோய்பரவுவதை ஆய்வு செய்து துல்லியமாக பரிசோதிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் பொன்னானி போன்றஇடங்களில் வெற்றிகரமாக நடந்துள்ளது. கேரளத்தில் கோவிட் பரவல் மூன்றாம் கட்டத்தில் இரண்டாவது பகுதியை எட்டியிருக்கிறது. மே 4 இல் 499 நோயாளிகள் 3 மரணம். ஊரடங்குக்கு முன்பு கேரளத்துக்கு வெளியே கோவிட் பரவல் வலுவடையவில்லை. எனவே, கேரளத்திற்கு வந்தோரில் நோய் குறைவாக இருந்தது. அதோடு, பிரேக் தி செயின் என்பதை வாழ்க்கை முறையாக மக்கள் சரியான முறையில் பின்பற்றினர்.இப்போது நோயாளிகள் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. எனினும்மரண விகிதம் குத்தென உயர்ந்திடவில்லை.  ஆனால் தொடர்பு மூலம் நோய் பரவல் 60 தவிகிதத்துக்கு மேல் உள்ளது. நோய் தொற்றிடம் தெரியாத நோயாளிகளும் அதிகரித்தனர். பல்வேறு மாவட்டங்களில் கிளஸ்டர்கள் உருவாகி உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

;