tamilnadu

img

கருப்புச் சட்டங்களை மக்கள் போராட்டம் முறியடிக்கும்

திருப்பூர்:
தங்கள் மதவாத அரசியல் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெறுவதற்கு இந்திய நாடு ஒன்றும் குஜராத் அல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் போராடி முறியடிப்பார்கள் என்றும்  மக்கள் நடத்தும் போராட்டத்தில் மத்திய  ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது என்றும் மோடி, அமித்ஷாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

மனிதநேயம், அமைதி, சமூக நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் மக்களைப் பிரிக்கும் மதவெறிச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். என்பிஆர், என்ஆர்சி நடைமுறைகளை எதிர்த்து மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரே சத்யாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் அவர் பேசியதாவது: 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீரட்டில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில், சிறுபான்மை மக்கள் ஒருவர் மீது கூட யாருடைய விரலும் பட முடியாது. அவர்களைப் பற்றி யாரும் விமர்சித்துப் பேச முடியாது. அந்தளவுக்கு பாஜக அரசு பாதுகாப்புத் தருகிறது என்று கொஞ்சம் கூடக் கூசாமல், தைரியமாகப் பொய் சொல்லியுள்ளார். மேலும் மோடியைப் பற்றி மற்றவர்களை விட தனக்கு மிக நன்றாகத் தெரியும், மனிதாபிமானம், இரக்க குணம் கொண்டவர். எல்லா மக்களையும் பாதுகாப்பதுதான் எங்கள் கடமை என்று கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் வடகிழக்கு தில்லி வன்முறை பற்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன. விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. ஆனால் தில்லியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி 53 மனித உயிர்கள் பறிக்கப்பட்ட பின்னும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்நிலை யிலும், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்ட நிலையிலும் கூட கடந்த ஐந்து நாட்களாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆட்சியாளர்கள் ஏன் தயாராக இல்லை. இதுதான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் லட்சணமா?நாடாளுமன்றத்தில் இவ்வளவு தகராறு களுக்கு இடையிலும் கார்ப்பரேட்டுகளின் வரிப் பிரச்சனை தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது என்றால், இவர்களை என்ன சொல்வது?

பாடம் புகட்டும் நேரம்
மோடி, அமித் ஷா ஆகியோர் குஜராத்தில் மதவெறி திட்டத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தியதைப் போல் தில்லியில் வன்முறையை அரங்கேற்றி தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.  இந்தியா ஒன்றும் குஜராத் அல்ல! அவர்களுக்குச் சரியான பாடம் புகட்டும் நேரம் இப்போது வந்துவிட்டது. மத்திய அரசு மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்துவது பற்றி மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. ஆனால் அதில் 43 சதவிகிதம் பேர்தான் முறையான ஆவணங்களுடன் தங்கள் விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். 57 சதவிகிதம் பேர் கணக்கெடுப்புக்கான ஆவண விபரங்களை சமர்ப்பிக்க முடிய வில்லை. பின் எதற்காக இந்த கணக்கெடுப்பு?

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி அதைத் தடுத்து நிறுத்த முடியாது, மத்திய சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை முறியடிக்கும் சக்தி மக்களுக்கு உண்டு. ஏற்கெனவே 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த சட்டத்தை மக்கள் முறியடித்த வரலாறு உண்டு. எனவே மத்திய ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக...
நாட்டின் பொருளாதாரத்தை ஐந்தாண்டு களில் 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றப் போவதாகவும், அதற்கு நான்கு அம்சங்களை செயல்படுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நான்கு திட்டங்களில் முதலாவது தனியார் முதலாளிகளுக்கு ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியிருக்கிறார். அதற்காகத்தான் பட்ஜெட்டில் ரூ.2.15 லட்சம் கோடி வரிச்சலுகை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திட்டம், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நேர்மையான, ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அரசு நிறுவனமாக இருந்த தொலைத்தொடர்புத் துறையை பிஎஸ்என்எல், விஎஸ்என்எல் என இரு கார்ப்பரேசன்களாக பிரித்தது 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு. சமதளப் போட்டியை ஊக்குவிப்பதாக சொன்ன பாஜக அரசு, கடைசியில் விஎஸ்என்எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டது. அதேபோல் இப்போது மோடி அரசு பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள்சம்பளம் தராமல், ஒப்பந்த தொலைத்தொடர்பு தொழிலாளர்களுக்கு வருடக்கணக்கில் சம்பளம் தராமல் பட்டினி போட்டு, இப்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல, விருப்ப ஓய்வை அறிவித்து முக்கால்வாசி பேரை பிஎஸ்என்எல்-ஐ விட்டு வெளியேற்றி விட்டது.

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 4ஜி அலைவரிசை செல்போன் சேவையை தனியார் நிறு வனங்களுக்கு கொடுத்துவிட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஓரவஞ்சனையாக நடந்து கொண்டது. இதுதான் நேர்மையான, சமதளப் போட்டியை ஊக்குவிப்பதா? அதேபோல் எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ள னர். ஆக பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் கொள்கையைக் கடைப் பிடித்துவிட்டு நேர்மையான போட்டியை ஊக்குவிப்பதாக நேர்மையற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்து மூன்றாவது திட்டமாக நாட்டின் செல்வத்தை உருவாக்குவோருக்கு ஆதரவாக இருப்பார்களாம். அவர்கள் அர்த்தப்படி தொழிலாளர்கள், உழைப்பாளிகள் செல்வத்தை உற்பத்தி செய்பவர்கள் கிடையாது, பெரிய முதலாளிகள்தான் உற்பத்தி செய்கிறார்களாம். எனவே இதிலும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக ஒத்துழைப்பார்களாம். தொழிலாளிகள் உழைக்காமல் எப்படி சொத்து வரும்? ஆனால் அவர்களைப் பற்றி இந்த ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லை.
அத்துடன் நான்காவது திட்டமாக, கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் உள்ள தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் புரையோடிப் போனவை என்று சொல்லி ரத்து செய்வது, திருத்துவது ஆகியவற்றை மேற் கொள்வோம் என்கின்றனர். இதன் மூலம் தொழிற்சங்கம் வைக்கும் உரிமையை மறுப்பது,

தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவது, பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தைப் பயன் படுத்துவது ஆகியவற்றைச் செய்வார்கள்.இதற்கு எதிராக இந்தியப் பொருளா தாரத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக உள்படஅனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் நடத்திய பிரம்மாண்டமான வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.இந்த சத்தியாகிரகப் போராட்டத்தின் நிறை வாக, தில்லி வன்முறை வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட 53 பேருக்கு அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று  இரங்கல் தெரிவித்த னர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். 

;