tamilnadu

img

முப்பெருமைக்கு சொந்தக்காரர் சங்கரய்யா... தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பேச்சு....

திருநெல்வேலி:
பெருமைக்குரிய (தகைசால்) விருதை பெருமைக்கு பொருத்தமானவர் பெருமைக்குரியவர் கையால் பெற்றது விருதுக்கும் பெருமை, தமிழுக்கும் பெருமை, தமிழகத்திற்கும் பெருமை என விடுதலைப்போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு திருநெல்வேலியில் நடைபெற்ற 100-வது  பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா 100 வது பிறந்தாள் சிறப்புக் கருத்தரங்கம் வியாழனன்று மாலை நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்குஅப்பாற்பட்டு இந்த சமூகத்தை நேசிப்பவர்கள், தேசத்தை நேசிப்ப வர்கள்  தோழர் என்.சங்கரய்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற போது தோழர் என்.சங்கரய்யா திருநெல்வேலிக்கு வந்திருந்து செயின்ட் சேவியர்கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பிரிட்டிஷ் காவல்துறை யின் தடியடிக்கு உள்ளானார்.சோசலிச விடுதலைக்கும், நாட்டின் விடுதலைக்கும் குரல் கொடுத்த என்.சங்கரய்யா ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உறுதியாக இருந்தார் என்று குறிப்பிட்டார்.

 தமிழ்க்கடல்  நெல்லை கண்ணன், சங்கரய்யாவை பேசுகையில், சங்கரய்யா-வை பாராட்டுவதில் நான் பெருமை அடைகிறேன். நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, எப்போது அழைத்தா லும் வருவேன் என்றார்.பிரதாபசந்திரன் ஒன்றாயிருந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். அவர் “சங்கரய்யா”-வாக மாறுவதற்கு அவரது தாத்தா “சங்கரய்யா” உண்ணாவிரதம் இருக்க வேண்டியதாயிற்று. பேரன் என்றால் என்ன அர்த்தம், “தாத்தாவின் பெயரை வைப்பர் தான் பேரன்.” “சங்கரய்யா” சங்க இலக்கியங்களைக் கற்றறிந்தவர் மட்டுமல்ல. அனைவரும் சங்க இலக்கியங்களைப் படியுங்கள். தமிழின் பெருமையை அறிந்துகொள்ளுங்கள். அதை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள் என்றார்.. அந்த “சங்க”ரய்யாவிற்கு தமிழக முதல்வர் தகைசால் விருது வழங்கிக் கௌரவித்துள்ளார். தகைசால் என்றால் “பெருமைக்குரிய” என்று பொருள். இந்த விருதை முதன் முதலாக அறிவித்த முதல்வர், அதை இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த “சங்கரய்யா”-விற்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளார். இதனால் சங்கரய்யாவிற்கு மட்டுமல்ல கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பெருமை. எதிர்காலத்தில் பலர் இந்த விருதைப் பெறப்போகிறார்கள். முதல் விருது பெருமைக்குரிய (தகைசால்) விருதை பெருமைக்குரிய பொருத்தமானவர் பெருமைக்குரியவர் கையால்பெற்றது விருதுக்கும் பெருமை, தமிழுக்கும் பெருமை, தமிழகத்திற்கும் பெருமை.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு தனிப்பட்ட வாழ்வில் வறுமை தெரியாது. துன்பம்தெரியாது. அப்படியே துன்பம் அவர்களைத் தேடிச் சென்றாலும். அவர்கள் அனுபவித்து வரும் “துன்பம்” வந்த துன்பத்தை விரட்டிவிடும். இயக்கத் திற்காக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்இன்றைய அரசியல் சூழலில் “கம்யூனிஸ்ட்டுகள் இல்லையென்றால் இந்த நாட்டிற்கு நாதியேது”  கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கரய்யாவின்-வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும், 16வயது மாணவராக இருந்தபோதே பொதுவாழ்விற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். சமூக நீதிக்காக மட்டுமல்ல, இந்தித் திணிப்பை எதிர்த்து, குலக்கல்வி முறையை எதிர்த்து குரல் கொடுத்தவர் தோழர் சங்கரய்யா. எவையெல்லாம் தேவையில்லை, வரக்கூடாது எனப் பேராடினாரோ அந்த ஆபத்துகள் மீண்டும் நம்மைச் சூழத் தொடங்கியுள்ளது. சங்கரய்யாவின் வழியில் இதை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும். அவருடைய எளிமையையும், நேர்மையையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
என்னை ஈர்த்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.  தோழர் ஜீவாவின் பேச்சு தான் அதற்குக் காரணம். தமிழகத்தை கொங்கு நாடாக பிரிக்க வேண்டுமென சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். பிரிவினை ஆபத்தானது.உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது கட்சியைத் தவிர வேறுயாரையும் வேட்பு மனுவையே தாக்கல்செய்ய விடவில்லை. சில நாள் கழித்துப்பார்த்தால் பாஜக அபார வெற்றி என்கிறார்கள். பாஜக-வின் நேர்மைக்கு உ.பி. உள்ளாட்சித் தேர்தல் ஒரு சான்று
என்றார். 

கே.பாலபாரதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு உறுப்பினர் கே.பால பாரதி பேசுகையில், தகைசால் விருதுவழங்கிய முதல்வருக்கு நன்றி தெரி வித்தார். தோழர் என்.சங்கரய்யா-வின் வாழ்வு தனித மனித வாழ்வோடு நின்றுவிடவில்லை. மக்களைப் பற்றி சிந்தித்தார்.விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், தொழிலாளி வர்க்கம் வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டுமென விரும்பினார். சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். பெண் அடிமைத்தனத்தை உடைத் தெறிய வேண்டுமென முழங்கினார்.சுதந்திரப்போராட்டம் வெற்றி பெறுவதற்கு மொழிவழி ரீதியாக மக்களைத் திரட்டவேண்டுமென்றார். மொழிவழி ரீதியாக மக்களைத் திரட்டியதன் மூலம் தான் சுதந்திரப்போர் வெற்றி பெற்றது. ஆனால், இன்றைக்கு மொழி வழி மாநிலங்களுக் கும் ஆபத்து வந்துள்ளது. ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. இதுஆபத்தானது.அன்றைக்கு பிரிட்டிஷ்அரசு ஆள்தூக்கி சட்டத்தைப் பயன்படுத்தித்தான் சங்கரய்யா உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில்அடைத்தது. அதே ஆள்தூக்கிச் சட்டங்களை பாஜக நடைமுறைப்படு த்துகிறது. அது ஸ்டேன்சுவாமியில் தொடங்கி தமிழ்க்கடல் நெல்லை.கண்ணன் வரை நீண்டிருக்கிறது. அன்று நடத்திய சுதந்திரப்போராட்டத்தை இன்று நாம் மீண்டும் நடத்திட வேண்டிய தேவை உள்ளது. சங்கரய்யாவின் ஆளுமையை நாம் பின்பற்ற வேண்டும் அவரது கருத்துக்களை உள்வாங்கி சமூக மாற்றத்திற்கு, புதிய உலகை படைப்பதற்கு முன்னேறு வோம் என்றார்.

படக்குறிப்பு : சங்கரய்யா நூற்றாண்டு விழாவில் நெல்லை கண்ணன் பேசினார்.  அருகில் கே.பாலபாரதி மற்றும் தலைவர்கள்.

;