tamilnadu

img

பிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

சென்னை:
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் பாலாசிங் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 67.மேடை நாடகங்களில் வலம் வந்தவர் பாலாசிங்.  நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.  இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத் தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில் லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்த  வகையில் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.கமலஹசனின் விருமாண்டி படத்திலும் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புதுப்பேட்டை படத்தின் அன்பு கதாபாத்திரம் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது; தாதாவாக நடிப்பில்அசத்தினார். என்ஜிகே படத்திலும் இவருடைய நடிப்புஅனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் சில நாட்களாகவே உடல் நலம் குன்றி இருந்தார், தற்போது சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளார். இவரது  மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;