tamilnadu

img

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...  

சென்னை 
தமிழகத்தில் முன்னணி திரைத்துறையினர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சகஜம் ஆகிவிட்டது. சொல்லப்போனால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த செயல் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கடந்த 2 மாத இடைவெளியில் ரஜினி, விஜய் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டை சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதனால் இது வெறும் புரளி எனத் தெரியவர, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என போலீசார் கண்காணிப்புடன் ஆய்வு செய்து வருகின்றனர். 

;