tamilnadu

img

சினிமா தயாரிப்பாளர் போனிகபூர் வீட்டில் அடுத்தடுத்து மூவருக்கு கொரோனா 

மும்பை 
இந்தி திரையுலகில் (பாலிவுட்) முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனிகபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் வசித்து வரும் போனிகபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் போனிகபூர் வீட்டை தனிமைப்படுத்தி வீட்டிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் போனிகபூர் வீட்டில் பணிபுரியும் மேலும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரது வீட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.  எனினும் போனிகபூர் மற்றும் அவரது மகள்களுக்கு கொரோனா இல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து மூவர் பாதிக்கப்பட்டுள்ளதால் போனிகபூர் மற்றும் அவரது மகள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். 

போனிகபூர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்தைத்  தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;