tamilnadu

img

சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து பேருந்தில் வந்த மாணவர்கள், பேராசிரியர்கள்  

  தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை வாகனப் பயன்பாடு  இல்லா தினமாக அனுசரிக்கப்பட்டது.  வாகனங்களிலிருந்து வரும் புகையினால் ஏற்படும் காற்று மாசுபடுவதை குறைக்கும் முயற்சியாக, அனைத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களை தவிர்த்து பேருந்து அல்லது மிதிவண்டியை உபயோகித்து நிறுவனத்திற்கு வந்தனர். இந்த தினத்தில் சுமார் 65 எண்ணிக்கை நான்கு சக்கர வாகனங்களும் மற்றும் 520 இரு  சக்கர வாகனங்களும் பயன்படுத்தப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழலில் கரியமில வாயு வெளியேறுவதையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும்.  இனி வரும் காலங்களில் வாகனப் பயன்பாடு இல்லாத தினம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கடைபிடிக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதை மேலும் ஒரு திட்டமாக செயல்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிக்கிறது” என்றார் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மா.வேலுச்சாமி.

;