tamilnadu

img

பிரபல மலையேற்ற வீரர் கோப்ரைட் மரணம்

நியோவோ லியோன் 
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் பிரட் கோப்ரைட் மற்றும் மற்றொரு அமெரிக்க வீரரான எய்டன் ஜேக்கப்சன் ஆகியோர் மெக்சிகோவின் நியோவோ லியோன் என்ற இடத்தில் உள்ள ஷைனிங் பாத்தில் மலையேறியுள்ளனர்.
ஷைனிங் பாத் செங்குத்தான வடிவம் உடையது. சற்று அசத்தல் பாறைகளுக்கு இரையாகுவது உறுதி என்பதால், இருவரும் கவனமாக மலையேறி 900 மீட்டர் உயர உச்சியை அடைந்து மீண்டும் கீழே இறங்கியுள்ளனர். 

கீழே இறங்கும் பொழுது இருவருக்குமே சறுக்கல் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். இதில் ஜேக்கப்சன் சுதாரித்து ஒரு பாறையைப் பிடித்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்ப, கோப்ரைட் பாறையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.   
செங்குத்தான மலைகளில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பாதுகாப்புக் கயிறு ஏதும் இல்லாமல் ஏறி உலக சாதனை படைத்த கோப்ரைட், சாதாரண 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து பலியானது விளையாட்டு உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

;