tamilnadu

img

பாசிச சக்திகளை துடைத்தெறிவோம்

சென்னை, மார்ச் 28 - இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் தலைவர் பேரா.  ஏ. கருணானந்தன், அமைப்பாளர் பொன்ராஜ், இணைத்தலை வர் பேராசிரியர் எல். ஜவகர் நேசன், துணை அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் வியாழனன்று (மார்ச் 28) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாசிச, சர்வாதிகாரமிக்கவர்களால் இரக்கமற்ற முறையில் நாடு இழிவுபடுத்தப்படுகிறது. சமூகம், அரசியல்  சாசனம், அரசியல், மதம், பொருளாதாரம் என அனைத்தை யும் பாஜக சீர்குலைக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புகள், சட்டங்கள் சிதைக்கப்பட்டு, ஒன்றிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டது. அவ்வப்போது நீதித்துறையும் கட்டுப்படுத்தப்படு கிறது. அரசியலமைப்புச் சட்டம், மேம்படுத்தப்படுவதற்கு மாறாக, சிதைக்கப்படுகிறது. மக்களின் அனைத்து வகையான உரிமைகள்; உடமைகள் பறிக்கப்படுகின்றன. ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது. அர சியலில் மதம் கலக்கப்படுகிறது. ஜனநாயகமா? சர்வாதி காரமா? என்ற கேள்வி மக்கள் முன் நிற்கிறது.

தேசத்திற்கு  ஆதரவாக நிற்பவர்கள், எதிராக நிற்பவர்கள் என நாடே பிரிந்து நிற்கிறது. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மான, ஜனநாயகம், சுதந்திரத்தை பறிக்கும் அம்சங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த, சமூகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆட்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட ஜனநாயகத்தை மீட்டு, மக்களின் உடமைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் லட்சியத்தோடு செயல்படுகிறோம்.

மாநாடுகள், உரை யாடல்கள், கருத்தரங்குகள், பிரச்சாரங்கள், சமூக வலைதள பிரச்சாரங்கள் என பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்த உள்ளோம். 18வது மக்களவைத் தேர்தல் இரண்டாம் சுதந்திரப் போர். இந்த தேர்தலில் பாசிச சக்திகள் துடைத்தெறிய பட  வேண்டும். அதற்கேற்ப மக்கள் வாக்களிக்கவேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிகழ்வின்போது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;