tamilnadu

img

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை:
“தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள்” என்ற பொருளில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தின் சார்பில் ஜூம் செயலிவழி பன்னாட்டுக்கருத்தரங்கம் பல்கலைக் கழகதுணைவேந்தர் பேராசிரியர் கோ.பார்த்தசாரதி தலைமையில் வியாழனன்று(4)தொடங்கியது. தமிழியல் புலத்தின் இயக்குநரும் கருத்தரங்கத் தலைவருமான பேராசிரியர் சு.பாலசுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினார்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலை.யின் மேனாள் இலக்கியத்துறைத் தலைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கச் செயலரும் உதவிப் பேராசிரியருமான மு.வையாபுரி வரவேற்க, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உதவிப்பேராசிரியருமான சு.அரங்கநாதன் நன்றி கூறினார்.ஜூன் 4 தொடங்கி ஜூன் 6 வரை நடைபெறும் ஆறு அமர்வுகளில் 97 பேராளர்கள் கட்டுரை வாசிக்கின்றனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் சுகன்யா அரவிந்தன், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு.வெங்கடேசன், தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன அரசியல்அறிவியல் துறைத்தலைவர் கா.செல்வகுமார், காரைக்குடி அழகப்பா பல்கலைத் தமிழ் பண்பாட்டு மைய இயக்குநர் செந்தமிழ்ப் பாவை,கோவை கற்பகம் பல்கலை மேனாள் தமிழ்ப்பேராசிரியர் கடவூர் மணிமாறன், சிவகாசி ஶ்ரீகாளீஸ்வரி கல்லூரி மேனாள் முதல்வர் ச.கண்மணி கணேசன் ஆகியோர் அமர்வுத் தலைவர்களாகப் பங்கேற் கின்றனர்.சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழர் வரலாறு, சமயம், மொழியியல், நாணயவியல், கோயில் கலை, சித்தர் பாடல்கள், பழங்குடியினர் பண்பாடு, கலை வரலாறு, தமிழ் இலக்கணம் ஆகிய பொருளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் நூலாக வெளியிடப்படும்.ஜூன் 6 நிறைவுவிழாவின் நிறைவுரையை பல்கலைக்கழகப் பதிவாளர் கு.ரத்னகுமார் நிகழ்த்துகிறார். தொடக்கவிழாவை யூடியூப் நேரலையில் காணலாம்.

;