tamilnadu

img

செப் 15க்கு பின்னர் பள்ளிகள் முழுமையாகத் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்- தமிழக அரசு 

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் , முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தையடுத்து தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் , ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 

அதன்படி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் , பார்வையாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , அனைத்து கடைகளும் , வணிக நிறுவனங்களும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர , கடற்கரை , நீச்சல் குளங்கள் , அங்கன்வாடி மையங்கள் , தங்கும் விடுதிகள் , கேளிக்கை விடுதிகள் , மதுக்கூடங்கள் , உயிரியல் பூங்காக்கள் , தாவரவியல் பூங்காக்கள் , படகு இல்லங்கள் ஆகியவற்றைச் செயல்படவும்  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

;