tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சத்யபிரதா சாகு அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை, ஏப். 26 - தமிழ்நாட்டில் உள்ள  39 மக்களவைத் தொகு திகளுக்கு கடந்த ஏப்ரல் 19  அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் வெள்ளிக் கிழமை (ஏப்.26) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மே 1 - கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுமா?
சென்னை, ஏப். 26 - தேர்தல் நடத்தை விதி கள் அமலில் உள்ள நிலை யில், இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. 

வழக்கமாக, கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டிய நாட்களுக்கு ஒரு வாரம் முன்னதாகவே, அதற்கான அறிவுறுத்தல் கள், வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மூலம், வருவாய்த் துறையினருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆனால், இம்முறை இது வரை அவ்வாறான தக வல்களோ, வழிகாட்டுதல் கள் கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டு மே 1-ம் தேதி கிராம சபை  கூட்டம் நடத்தப்பட வாய்ப் பில்லை என்று ஊரக வளர்ச்சித் துறை வட்டா ரங்கள் தெரிவித்தன.

மோடிக்குத் எதிரான வழக்கு: விசாரணை நடக்கவில்லை
புதுதில்லி, ஏப். 26 - பிரதமர் நரேந்திர மோடி மீது ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்ற வழக்கறி ஞர் தில்லி உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந் தார்.

“பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 9 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபட்டில் நடந்த கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி பேசினார். இந்து தெய்வங்கள் மற்றும் சீக்கிய தெய்வங்களின் பெயர்களையும், வழிபாட்டு தலங்களின் பெயர்களையும் பயன்படுத்தி அவர் வாக்கு சேகரித்தார். அதோடு எதிர்க் கட்சிகள் இஸ்லாமியர் களுக்கு ஆதரவாக இருப்ப தாக தெரிவித்தார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் அடுத்த 6 ஆண்டு களுக்குப் பிரதமர் மோடி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’’ என ஆனந்த் எஸ் ஜோன்டேல் தனது மனு வில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நீதிபதி விடுப்பில் சென்றிருந்ததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

;