tamilnadu

img

தொடர் விடுமுறை: 3 மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்

சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டில் பள்ளி தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த்துள்ளது. மார்ச் 29 புனித வெள்ளியை யொட்டி அரசு விடுமுறை. மார்ச் 30, 31 ஆகியவை சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள். எனவே தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி வெளியூர் பயணங் களுக்கு பலரும் திட்டமிட்டுள்ளனர்.

முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்து, ரயில், விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனையில்லை. கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்களுக்குத் தான் சிரமம். ஏனெனில் டிக்கெட் கிடைக்காது. கிடைக்கும் டிக்கெட்களின் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்தி ருக்கும். விடுமுறை நாட்க ளில் பெருவாரியான மக்களின் தேர்வுஎன்பது பேருந்துகள் தான். அரசு பேருந்துகளில் நியாமான கட்டணம் என்பதால் விரைவில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிடுகிறது. எனவே முன்பதிவு செய்து சொகுசாக பயணிக்க விரும்புபவர்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் தான் ஒரே வழி.

ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணத்தை அரசு கட்டுப் படுத்தினாலும், இதுபோன்ற விடுமுறை நாட்களில் அவர்க ளின் விருப்பத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படு கிறது. அந்த வகையில் சாதாரண நாட்களில் 700 முதல் 1,000 ரூபாய் வரை இருந்த டிக்கெட் கட்டணம், தற்போது தொடர் விடுமுறையால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து மதுரைக்கு 5,000 ரூபாயும், சென்னை யில் இருந்து கோவைக்கு 5,000 ரூபாயும், சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு 3,000 ரூபாயும், சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு 2,200 ரூபாயும் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

;