tamilnadu

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிக்கல்....

விருதுநகர்:
வத்திராயிருப்பு அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பத்தில் சிக்கல் ஏற்பட் டுள்ளது  என்று புகார் எழுந் துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அரசு மருத்துவமனையில் 92 படுக்கைகள் உள்ளன. மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் திரும்பிச் செல்லும்  நிலை உள்ளது. எக்ஸ்ரே வசதி இருந்தும் டெக்னீஷியன் இல்லாததால் செயல்படாமல் உள்ளது.  இங்கு மூன்று மருத்துவர்கள் மட்டுமே  உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்  மார்க்கண்டே யன் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.  மருத்து வர் இல்லாததால் செவிலியர்கள் மாத்திரை கொடுத்து அனுப்பி உள்ளனர்.  நள்ளிரவு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே மீண்டும் வத்திராயிருப்பு  மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர் இல்லாததால் விருது நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு செவிலி யர்கள் கூறியுள்ளனர். 

வத்திராயிருப்பு பகுதி யைச் சார்ந்த ஒருவர் நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவ மனைக்கு வந்துள்ளார். மருத்துவ அலுவலர் தகவலறிந்து இரவில் மருத்துவமனைக்கு வந்து அவரை பரிசோதித்துள்ளார். மருந்து இல்லாததால் வெளியில் மருந்து வாங்கி அவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.  பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு பரிந் துரை செய்து அனுப்பியுள்ளார்.வத்திராயிருப்பு மருத்துவ மனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத தால், திருவில்லிபுத்தூர், விருது நகர், மதுரைக்கு அனுப்பும் நிலை உள்ளது. 

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 19 மருத்துவர்கள் இருக்கவேண்டும். ஆனால் மூன்று மருத்துவர்கள் தான் பணியில் உள்ளனர். அதில் ஒரு மருத்துவர் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருக்கிறார். இரண்டு மருத்து வர்கள் தான் தற்போது பணியில் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாகஇரவு நேரங்களில் செவிலியர்கள் தங்களால் இயன்ற சேவையை செய்து வருகின்றனர்.இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

;