tamilnadu

வீடு புகுந்து கொள்ளை காவல் துறையினர் விசாரணை

கோவை, செப். 4- வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 30 லட்ச பணம் மற்றும் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளைய டித்து சென்ற சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி சித்ரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற தனி யார் நிறுவன ஊழியர் துரை சாமி (70).  இவர் வெள்ளி யன்று காலை தனது நெருங் கிய உறவினர் இல்லத் திரு மணத்திற்கு கீரணத்தம் பகு திக்கு சென்றுள்ளார்.  

இந்நி லையில், இவர் திருமணம் முடிந்து வீடு திரும்புகையில் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப் பட்டு இருந்த ரூ. 30 லட்ச பணம் மற்றும் 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

;