tamilnadu

img

கேரளத்தின் புதிய ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு வரவேற்பு

திருவனந்தபுரம்:
புதிதாக நியமனம் செய்யப்பட்டு வியாழனன்று திருவனந்தபுரம் வந்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது  கானுக்கு அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். கேரள ஆளுநராக இருந்த பி.சதாசிவத் தின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்துபுதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் வியாழனன்று திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கேரள அமைச்சர் கே.டி.ஜலீல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமைச்சர்கள் ஏ.கே.பாலன், இ.சந்திரசேகரன், கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பேசினர். 

கேரளத்தின் 22ஆவது ஆளுநராக வெள்ளியன்று (செப்.6) ஆரிப் முகமது கான்பொறுப்பேற்க உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். ஷாபானு வழக்கில் முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அடிப்படைவாதிகளின் வற்புறுத்தலுக்கு ராஜீவ் காந்தி அடி பணிந்தார். அதன்படி முஸ்லீம் பெண்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை கான் ராஜிநாமா செய்தார். ஜனதா தளம், பிஎஸ்பி கட்சிகளில் இருந்த இவர் அண்மைக் காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர் கேரள ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர்பினராயி விஜயன் ஏற்கனவே வரவேற்பு தெரிவித்திருந்தார்.

;