tamilnadu

img

கேரள நிலச்சரிவில் இறப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

கேரளா நிலச்சரிவில் ஆறு வயது சிறுவன் மற்றும் 57 வயதுடைய ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, மேலும் ஒன்பது சடலங்களை மீட்டெடுக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை உயரமான இடூக்கி மாவட்டத்தில் உள்ள பெட்டிமுடியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்பது பேரை இன்னும் காணவில்லை.

செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் சென்னையில் இருந்து இரண்டு கிரவுண்ட் பெனட்ரேட்டிங் ரேடார்கள் (ஜிபிஆர்) மற்றும் நான்கு பேர் கொண்ட குழு ஆகியவை தேடுதல் நடவடிக்கைகளில் இணைந்தன என்று இடுக்கி ஆட்சியர் எச்.தினேஷ் கூறியுள்ளார். இன்ஸ்டிடியூட் ஆப் ஓசியானோகிராஃபி மூலம் ரேடார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மோப்ப நாய்கள் அணியின் உதவியும் முன்னர் தேடல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் சீரற்ற வானிலை காரணமாக, அவற்றின் சேவைகள் இப்போது பயன்படுத்தப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.ஆர்.எஃப்), தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் வன அதிகாரிகள் கூட்டாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராஜமாலாவின் பெட்டிமுடியில் குறைந்த பட்சம் 82 தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்கள், தகரம் மற்றும் சிமண்டு ஓடுகளால் செய்யப்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 20 வீடுகள் வரிசையாக இருந்துள்ளது. இந்த நிலையில், மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.12 பேர் மீட்கப்பட்டனர்.

;