tamilnadu

img

3 குழந்தை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது

டேராடூன்:
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று, உத்தர்கண்ட் மாநில பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.உத்தர்கண்ட் பஞ்சாயத்து மசோதா- 2019, அம்மாநில சட்டப்பேரவையில், கடந்த செவ்வாய்க் கிழமையன்று தாக்கல் செய்யப்பட் டது. அதன் மீதான விவாதம் புதன் கிழமையன்று நடைபெற்றது. அப் போது இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஜனநாயகத்திற்கான மாறான அம் சங்கள் மசோதாவில் இருப்பதாக தெரிவித்தனர். எனினும், எந்தக்கருத்தையும் பாஜக ஆட்சியாளர் கள் காதுகொடுத்துக் கேட்பதாக இல்லை. இந்நிலையில், குரல் வாக்
கெடுப்பு மூலம் இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.இந்த புதிய சட்டத்தின்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் (பொது) மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தது 8-ஆம் வகுப்பும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தபெண்கள் 5-ஆம் வகுப்பும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். அதேநேரம்2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.2019 இறுதியில் உத்தர்கண்டில்உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்புதிய மசோதாநிறைவேற்றப்பட்டுள்ளது.

;