tamilnadu

img

பெலாரஸ் பொதுத்தேர்தல்... மீண்டும் ஆளுங்கட்சி வெற்றி.... 

மின்ஸ்க் 
கிழக்கு ஐரோப்பா நாடான பெலாராஸில் கொரோனா பதற்றத்துக்கு இடையே நேற்று (ஞாயிறு) ஜனாதிபதிக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. போராட்டங்கள், வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குளை உடனடியாக அதாவது தேர்தல் முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளுங்கட்சியான சுதந்திர கட்சி 80.23 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இதன்மூலம் அலெக்சாண்டர் லூகாஷென்கோ 6-வது முறையாக மீண்டும் ஜனாதிபதி அரியணையில் அமரவுள்ளார். தோல்வியடைந்த எதிர்க்கட்சியான பெலாரஷ்ய சமூக ஜனநாயக கட்சி தேர்தல் முடிவுகள் மோசடி என வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் நாட்டின் அனைத்து இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். 100-க்கு மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

;