tamilnadu

img

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மோடி அரசு திட்டம்... வருவாய் இழப்பை ஈடுகட்ட போகிறார்களாம்

புதுதில்லி:
ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் பெரிய அளவிற்கு அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும் என்று மத்திய பாஜக அரசு கணக்கு போட்டது. ஆனால், அது நடக்கவில்லை. ஜிஎஸ்டி-க்கு முன்னதாக மோடி அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம்,பாஜகவின் திட்டத்தை பொடிப் பொடியாக்கி விட்டது.ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய், ஒவ்வொரு மாதமும் சரிவைச்சந்தித்து வருகிறது. 2017 மே மாதத்தில் 14.4 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், தற்போது 11.6
சதவிகிதமாகக் குறைந்து விட்டது.ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் மாதந் தோறும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் வரி வசூலிக்க மோடி அரசுஇலக்கு நிர்ணயித்திருந்தது. 2019-20நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரூ. 6 லட்சத்து 63 ஆயிரத்து 343 கோடி வசூல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், மொத்தமே ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 490 கோடிதான் தற்போது வசூலாகியுள்ளது. நிர்ணயித்த வரியில் 50 சதவிகித இலக் கைக் கூட எட்ட முடியவில்லை.

ஆனாலும், மோடி அரசு, தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விப்பதற்கு தவறவில்லை. கடந்த செப்டம்பர் மாதம்‘கார்ப்பரேட் வரிச் சலுகை’ என்றபெயரில், சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் 40 ஆயிரம் கோடி ரூபாயை தானம்செய்தது. அதாவது, அரசு கஜானாவுக்கு வரவேண்டிய சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சூறையிட்டது.இவ்வளவையும் செய்து விட்டுதான், தற்போது ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்து விட்டதால், வருவாயை ஈடுகட்டுவதற்கு, புதிதாகசில பொருட்கள் மீது வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றுபோலிக்கண்ணீர் வடித்துள்ளது.அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள், பால், தயிர், உப்பு, தானியங்கள், இறைச்சி, முட்டை போன்ற சுமார் 7 சதவிகித பொருட்களுக்கும், கல்வி மற்றும் அடிப்படை மருத்துவம் போன்ற சேவைகளுக்கும் இதுவரை ஜிஎஸ்டிவிதிக்கப்படவில்லை. இந்நிலையில், இவை அனைத்தையும் வரி வரம்புக்குள் கொண்டுவரலாமா? என்ற ஆபத்தான யோசனையில் இறங்கியுள்ளது.இது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மூலம்கடிதம் ஒன்றை எழுதி, அதில், புதிய வரி விதிப்பு மற்றும் வரி உயர்வு குறித்து, டிசம்பர் 18 அன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் கருத்துகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

;