tamilnadu

img

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.83.63 ஆக உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.83.63 ஆகவும், 77.72 ஆகவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 7-ஆம் தேதியிலிருந்து 22-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளன. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.83.63 ஆகவும், டீசல் விலை ரூ.77.72 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், தில்லியில், பெட்ரோல் விலை ரூ.80.43 ஆகவும், டீசல் விலை ரூ.80.53 ஆகவும் அதிகரித்துள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை ரூ.87.19 ஆகவும், டீசல் விலை ரூ.78.83 ஆகவும் அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில், பெட்ரோல் விலை ரூ.82.10 ஆகவும், டீசல் விலை ரூ.75.64 ஆகவும் அதிகரித்துள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வின் காரணமாகவே, இந்த விலை உயர்வு காணப்படுகிறது. இதில், மத்திய அரசுக்கு உற்பத்தி வரியாக 32.98 ரூபாயும், மாநில அரசுகளுக்கு வாட் வரியாக 17.71 ரூபாயும், நாம் தற்போது செலுத்தி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

;