states

img

கேரள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 1.75 லட்சம் பேர்....

திருவனந்தபுரம்:
இந்த கல்வியாண்டில் (2020-21) அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் பத்து வகுப்புகளில் 1.75 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட குழந்தை கணக்கெடுப்புக்குப் பிந்தைய ஆரம்ப மதிப்பீடாகும் இது. பொதுக் கல்வி பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நான்குஆண்டுகளில், 6.8 லட்சம் குழந்தைகள் பொதுக்கல்வித் துறையில் நுழைந்துள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும், 8170 மாணவர்கள் முந்தைய ஆண்டை விட கூடுதலாக முதல் வகுப்பில் சேர்க்கை பெற்றனர். ஐந்தாம் வகுப்பில் அதிக சேர்க்கை நடந்துள்ளது. இதுமுந்தைய ஆண்டை விட 43,789 அதிகம். எட்டாம்வகுப்பில் கூடுதலாக 35,606 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதலாக 1,75,074 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தற்போது 33,75,304 லட்சம் குழந்தைகள் உள்ளனர். மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையிலும் முந்தைய ஆண்டுகளை விட 47,760 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், உதவி பெறாத (சுயநிதி) பள்ளிகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 91,510 குறைந்துள் ளது.கைட் (கேரள கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான தொழில் நுட்பம்) தொகுத்த ‘முழுமையான’ பள்ளி மேலாண்மை போர்டல் மூலம்புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடவடிக்கைகள் முடிந்ததும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

பொது கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் கல்வி தரத்தையும் வழங்கியதன் விளைவாக ஏற்பட்ட புதிய விழிப்புணர்வு இது என்று முதல்வர் பினராயி விஜயன்கூறினார். பொதுப் பள்ளிகளில் இப்போது உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் வசதிகள் உள்ளன.ஏழைக் குழந்தைகள் கூட உலகத் தரம் வாய்ந்தகல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்கான சமூகத்தின் பார்வையின் ஒரு பகுதியாக பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள், பெற்றோர் கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெரும்ஆதரவு கிடைத்தது. கேரளாவில் கல்வித்துறையின் தீவிர மாற்றத்தை அரசாங்கம் ஆரம் பித்துள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

;