science

img

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மன உளைச்சலை கண்டறிய முடியும் - ஆய்வு தகவல்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களில் குரலை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு அதிக அளவில் மன உளைச்சல் (பிடிஎஸ்டி) இருப்பதை கண்டறிய முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

உலகில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர், அவர்கள் வாழ்க்கையின் ஒரு தருணத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். இந்த பிரச்சனை சிலருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்த கூடியதாய் இருக்கிறது. பொதுவாக அதிக அளவில் மன உளைச்சல் இருப்பதை கண்டறிய மருத்துவ நேர்காணல் அல்லது சுய அறிக்கை மதிப்பீடு போன்றவற்றை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களில் குரலை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு அதிக அளவில் மன உளைச்சல் (பிடிஎஸ்டி) இருப்பதை கண்டறிய முடியும் என்று மன அழுத்தம் மற்றும் பதட்டம் இதழில், இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

இந்த செயற்கை நுண்ணறிவு, பேச்சு பகுப்பாய்வு தொழில்நுட்பம் மூலம் ஒருவரின் செற்களில் இருந்து அதிர்வெண்(frequency), சத்தம் (rhythm), தொனி (tone), உச்சரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, அவர்களின் உணர்வு, அறிவாற்றல், உடல்நலம், மன ஆரோக்கியம் மற்றும் தகவல் பரிமாரும் தரம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டது.

மேலும், ஓட்டோ, அம்பிட் மற்றும் டீகோடட் ஹெல்த் போன்ற ஆரம்பத் தொழிற்துறை நிறுவனங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


;