india

img

சூடுபிடித்தது சோலார் - பாலியல் வழக்கு.... சிபிஐ விசாரணையில் 6 எப்ஐஆர் பதிவு...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் நடந்த சோலார் - பாலியல் துன்புறுத்தல் வழக்கில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு எதிரான புகாரை முதன்மையானதாக கூறியுள்ள  சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளது. சிபிஐ ஆய்வாளரின் முதற்கட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது ஆறு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்த சோலார் பாலியல் வல்லுறவு வழக்கை 2021 ஜனவரி 24 அன்று, சிபிஐயிடம் கேரள அரசு ஒப்படைத்தது. சட்ட ஆலோசனை பெற்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்திருந்த நிலையில், சிபிஐ ஆறு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. முதல்வர் பதவியைதவறாக பயன்படுத்தி கிளிப் ஹவுஸில் (முதல்வர் இல்லம்) உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த பெண் துன்
புறுத்தப்பட்டார் என்பது உம்மன் சாண்டிக்கு எதிரான புகார்.

அமைச்சராக இருந்தபோது பாலியல் வல்லுறவு செய்தனர் என்பது அடூர் பிரகாஷ் மற்றும் ஏபி அனில் குமார் மீதான புகார். ஏ.பி.அனில் குமார் தனது அதிகாரப்பூர்வ இல்லமான ரோஸ் ஹவுஸ், லு மெரிடியன் ஹோட்டல் மற்றும் கேரளா ஹவுஸ் ஆகியவற்றில் பலமுறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். கே.சி.வேணுகோபால் மத்திய அமைச்சராக இருந்தபோது பாலியல் வல்லுறவு செய்ததாகவும், ஹிபி ஈடன் எம்எல்ஏ விடுதி மற்றும் எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அப்போது யுடிஎப் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஏபி அப்துல்லாக்குட்டி மஸ்கட் ஹோட்டலில் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இது குறித்து கன்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலமும் கொடுத்தார். அட்டக்குளங்கரா சிறையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் முன்பு எழுதிய கடிதத்திலும் இவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி சிவராஜன் கமிஷனும் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என்று அறிவித்தது.சிபிஐ விசாரணைக்குழு தலைவரான கூடுதல் கண்காணிப்பாளர் சி.பி.ராமதேவன் திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றத்தில்  ஐந்து எப்ஐஆர்களையும், பாலியல் துன்புறுத்தல், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு எப்ஐஆரையும் தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிரான எப்ஐஆரில் அவரது மருமகன் தாமஸ் குருவிளயின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எப்ஐஆர், அனில் குமாருக்கு எதிரானதாகும். விசாரணை நடத்தும் பொறுப்பு சிபிஐ திருவனந்தபுரம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு, மோசடி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது ஆகியவை உம்மன் சாண்டி மற்றும் தாமஸ் குருவிள மீதானகுற்றச்சாட்டுகள். அடூர் பிரகாஷைத் தவிர மற்ற 5 பேர் மீது பெண்மையை அவமதித்ததாகவும், பாலியல் வல்லுறவுசெய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடூர் பிரகாஷ் மற்றும் அப்துல்லாக்குட்டி ஆகியோர் மீதும் பாலியல் வல்லுறவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல்லாக்குட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

;