india

img

பாஜகவுக்கு எதிராக கட்சி ஆரம்பித்த உ.பி. ஐபிஎஸ் அதிகாரி கைது..... பெண்ணைத் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு....

லக்னோ:
உத்தரப் பிரதேச ஐபிஎஸ்அதிகாரி அமிதாப் தாக்கூருக்கு கடந்த மார்ச் மாதம்ஒன்றிய உள்துறை அமைச்சகம் கட்டாய ஓய்வு அளித்தது.பணியில் முறையாக செயல் படவில்லை என்று அதற்கு காரணம் கூறியிருந்தது.இதனிடையே, அமிதாப்தாக்குர் புதிய கட்சி ஆரம் பித்து, 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டிருந்த பின்னணியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.லக்னோவில் உள்ள வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு  அமிதாப் தாக்குர் குண்டுக்கட்டாக ஜீப்பில் ஏற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள் ளது. 

அவரை சுற்றி மக்கள் கூடியிருப்பது போன்றும், கைதுக்கு தாக்குர் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கையை காட்டும்வரை வரமாட்டேன் என அவர் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம், உச்ச நீதிமன்ற வாயிலில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கிலேயே அமிதாப்தாக்கூரை உ.பி. காவல்துறையினர் வெள்ளிக்கிழமையன்று கைது செய்துள் ளனர்.கடந்த ஆகஸ்ட் 16 அன்று,உச்சநீதிமன்ற வாயிலில் தனது ஆண் நண்பருடன் பெண்ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில், சிகிச்சை பலனின்றி அவர்இறந்தும் போனார். இந்நிலையில், இறப்பதற்கு முன்பு முகநூல் நேரலையில், அமிதாப் தாக்குர்
உள்ளிட்ட காவல்துறையினர் பலர், தன்னை வழக்கின் மூலம் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். அரசியல் தலைவர்கள் பலரின் பெயர்களையும் அவர் கூறியிருந்தார். இந்த குற் றச்சாட்டை வைத்தே உ.பி. அரசு அமிதாப்பை கைது செய்துள்ளது.

;