headlines

img

சவடால் மட்டும் பதில் ஆகாது

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவா தத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார்.  இந்த விவாதத்தின் போது விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் போன்ற பல்வேறு பிரச்ச னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களிடம் எழுந்துள்ள அச்ச உணர்வையும், அதன் காரண மாக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்க ளையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. 

ஆனால் இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி இந்தப் போராட்டங்களை காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும்தான் தூண்டி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கெதிரான போராட்டங்களுக்கு பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என பாஜக வினர் குற்றம் சாட்டியபோது சீத்தாராம் யெச்சூரி நாங்கள் பின்னால் இருக்க வில்லை.  போராட்டத்தின் முன்வரிசையில்தான் இருக்கி றோம் என பதிலடி கொடுத்தார். மக்கள் போராடு கிற போது அவர்களோடு நிற்பது குற்றமல்ல, மாறாக அது கம்யூனிஸ்ட்டுகளின் வர்க்கக் கடமை. 

நாட்டு மக்களை துண்டாடக் கூடிய சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என மோடி அரசு கொண்டு வந்துள்ள கொடூர சட்டங்களை எதிர்த்து சிறு பான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை தடுக்க ஒரே வழி இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதுதான். ஆனால் அதற்கு தயாராக இல்லாத மோடி அரசு அடக்கு முறை மூலம் மக்களை ஒடுக்க முயன்று தோற்ற தால் ஆத்திரத்துடன் மோடி பேசியுள்ளார்.

விவசாய விளைப் பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை தருவோம் என கடந்த தேர்தலுக்கு முன்பிருந்தே மோடி கூறி வந்தநிலையில் தற்போதும் அதையே கூறுவது யாரை ஏமாற்ற?

வேலையின்மையை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன, அதனால் எந்தளவுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என எதையும் பிரதமரால் கூற முடியவில்லை. ஆனால் அரசியல் 370வது பிரிவை ரத்து செய்தோம், முத்த லாக் தடைச் சட்டம் கொண்டு வந்தோம், ராமர் கோவில் பிரச்சனையை தீர்த்தோம் என மோடி அடுக்குகிறார். ராமர் கோவில் பிரச்சனையை நாங்கள்தான் தீர்த்தோம் என்றால் உச்சநீதி மன்றம் இவர்கள் சொல்லும்படிதான் தீர்ப்பு வழங்குகிறதா என்ற கேள்வி எழாதா?

முன்னோர்களின் விருப்பத்தின் அடிப்ப டையில் தனது அரசு நடவடிக்கை எடுப்பதாக மோடி பீற்றிக் கொள்கிறார். இவர்களது முன்னோ டிகளான சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோரின் விருப்பப்படிதான் இந்த அரசு செயல்படுகிறது. ஆனால் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக இருப்பதால்தான் போராட்டப் பேரலை ஓங்கி வீசுகிறது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். 

;