games

img

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதி வெளியீடு: பிசிசிஐ  

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டி ஜூன் மாதம் விளையா உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

தந்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வருகிற மே மாதம் 29 ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது.    

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் ஜூன் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. 2ஆவது போட்டி கட்டாக்கில் ஜூன் 12 ஆம் தேதி, 3ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் ஜூன் 14 ஆம் தேதி, 4ஆவது போட்டி ராஜ்கோட்டில் ஜூன் 17ஆம் தேதியும் 5ஆவது போட்டி பெங்களூருவில் ஜூன் 19 ஆம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.    

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 15 போட்டிகளில் மோதி இருக்கின்றன. அதில் ஒன்பது முறை இந்திய அணியும், ஆறுமுறை தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளுக்கு இடையே கடைசியாக 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடரை சமனில் முடித்தனர்.

;