facebook-round

img

வலைப்பதிவு : இதுதான் கம்யூனிசம்... மனிதநேயம்...

இந்த பெருந்தொற்று காலத்தில் ஒரே  நாளில் அமேசான் முதலாளி ஜெப் பெசோசின் சொத்து 13 பில்லியன் டாலர் (ரூ. 93,600 கோடி) அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் அவரது ஊழியர்கள் போதிய வருமானம் இல்லாமல் இன்னல்படுகின்றனர். 50 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இல்லா நிவாரணத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த உண்மைகள் எதை காட்டுகின்றன? நமதுபொருளாதாரம் பில்லியனர்களுக்கு ஆதரவாக மோசடியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

பெர்னி சாண்டர்ஸ் ,அமெரிக்க அரசியல் தலைவர்

---------------------------------

செய்தி: முகேஷ் அம்பானி 77.4 பில்லியன் டாலர் சொத்துடன் உலகின் 5வது பணக்காரர் ஆனார்.இந்தியாவில் வேலை யில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கோடிக் கணக்கானவர்கள் பட்டினியில் வாடுகின்றனர். வெறும்உயிர் வாழ்வதே சிரமமாக உள்ளது. ஆனால் கூட்டுக்களவாணி சூப்பர் பணக்காரர்கள் மேலும் பணக் காரர்கள் ஆகின்றனர். இந்த அரசாங்கத்தின் கேடுகெட்ட கொள்கைகள் இதனை சாத்தியமாக்குகிறது.

டிவிட்டரில்... மார்க்சிஸ்ட் கட்சி

---------------------------------------

எங்கெல்லாம் ஆட்சியைக்கவிழ்க்க பா.ஜ.க.போதுமான எண்ணிக்கை யில் சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்குவதில் வெல்கிறதோ அங்கெல்லாம் ஆளுநர்கள் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சட்டமன்றத்தை கூட்டுகின்றனர். ராஜஸ்தா னில் பா.ஜ.க. அதனை செய்யமுடியவில்லை. அங்கு முதல்வர் கோரிக்கை வைத்தும் சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுக்கிறார். என்ன வினோதம்?

பிரசாந்த் பூஷண்,பிரபல வழக்கறிஞர்

-----------------------------

செய்தி: இடம் பெயர் தொழிலாளர்கள் பயணத்தில் இரயில்வே ரூ.429.90 கோடி ரூபாய் ஈட்டியது.பணக்கார கூட்டுக்களவாணி களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தள்ளுபடி செய்துவிட்டு சாதாரண உழைப்பாளிகளின் துன்பகாலத்தில் கூட அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதுதான் மோடினாமிக்ஸ் கொடூரம்! இந்த அரசாங்கத்தின் அணுகுமுறையும் வாய்ச்சவடால்களும் மிகவும் வெட்கக்கேடானது; கண்டிக்கத்தக்கது!

அன்வர்

----------------------------------
கேரளாவின் காசர்கோடில் கோவிட்19 காரணமாக தனிமையில் இருந்த ஒரு சிறுவனை பாம்புகடித்துவிட்டது. தொற்று பயம் காரணமாக உதவிட அனைவரும் தயங்கினர். அப்பொழுது அங்கு வந்த ஜினில் மாத்யூ என்பவர் பாம்பை அடித்துவிட்டு சிறுவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார். சிறுவன் பிழைத்து கொண்டான். தன்னை தானே மாத்யூ தனிமைப்படுத்தி கொண்டார். ஜினில் மாத்யூ மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர். 
செவ்வணக்கம் தோழர் மாத்யூ! இதுதான் கம்யூனிசம்! மனிதநேயம்!

அஷோக் தவாலே, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்

;