districts

img

ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டு கொண்டதன் பேரில், பள்ளி மாணவி ஒருவர் திறந்து வைத்தார்

தேனி, செப்.15-  திண்டுக்கல் அருகே பள்ளி மாணவர்கள் நடு கற்களை கண்டறிந்து ஆய்வு செய்தனர்.  போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.மாணிக்க ராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர் பி.பெரியசாமி, வரலாற்று ஆசிரியர் அ. கருப்பையா ஆகியோர் இப்பள்ளியில் பயி லும் வரலாறு மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தொல் லியல் சார்ந்த கள ஆய்வு எவ்வாறு செய்வது என்பது குறித்து நேரடி பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது காலத்தால் கி.பி.17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு நினைவு நடு கற்களை மாணவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து வரலாற்றுத்துறை பேரா சிரியர் சி.மாணிக்கராஜ் கூறியது: பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் சார்ந்த கள ஆய்வு எவ்வாறு செய்வது, கள ஆய்வு செய்ய தொன்மையான இடங்களை கண்ட றிவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித் தோம். அப்போது திண்டுக்கல் மாவட்டம் சித்தை யன்கோட்டை அருகேயுள்ள அழகர்நாயக் கன்பட்டி பகுதியில் ஆய்வு செய்தோம். அங்கு இரண்டு விதமான நினைவு நடுகற்கள் கண்ட றியப்பட்டன. ஒரு நடுகல் இரண்டு நிலை அடுக்கு களை கொண்டிருந்தது.

அக்கல்லின் முன் பக்கமுள்ள கீழ் அடுக் கில் வீரன் ஒருவன் தன் மனைவியுடன் சமபங்க நிலையில் நின்றுள்ள காட்சியை புடைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். வீரனின் வலது கையில் துப்பாக்கி ஒன்று உள்ளது. இடது கை இடப்பக்க இடையில் வைக்கப்பட்டுள் ளது. இதைப்போல் வீரனின் மனைவி தனது வலது கையில் தீப்பந்தம் ஒன்று பிடித்தபடியும், இடது இடையில் வைத்தபடியும் உள்ளது. இரு வருக்கும் நாயக்கர் கால மக்கள் அணியும் கொண்டைஅமைப்பு உள்ளது. மேலுள்ள இரண்டாம் அடுக்கில் துப்பாக்கி வீரனும் அவன் மனைவியும் இறந்த பின்னர் சொர்க்கலோகம் சென்றதை கூறும் விதமாக இருவரும் கைகளை கூப்பி வணங்கி நிற்கும் காட்சி சிற்பமாக வடி வமைக்கப்பட்டுள்ளது.மற்றொரு பக்கம் பெண் ஒருத்தி தனது குழந்தையை இடதுஇடையில் அமர்த்தியபடி நிற்கும் காட்சி புடைப்பு சிற்பமாக காட்சிப்படுத்தப்பட் டுள்ளது. மற்றொரு பக்கம் பெண் ஒருத்திவலது கையில் தீப்பந்தம் பிடித்து சமபங்ககோலத்தில் நிற்கும் காட்சி சிற்பமாக காணப்படுகிறது. சதி செய்து இறக்கும் பெண்களின் நினை வாக எடுக்கப்படும் சதிக்கல்லில் அவர்களின் கைகளில் தீப்பந்தம் காட்டப்பட்டிருக்கும். இதைப்போல் இந்த நடுகல்லிலுள்ள பெண்களின் சிற்பத்திலும் தீப்பந்தம் உள்ளதால் இக்கல் சதிக்கல் வகையை சார்ந்ததாகும். இதே பகுதியில் காணப்படும் மற்றொரு நினைவு நடுகல்லில் சமூகத்தில் உயர்ந்த வர்கள் அல்லது குறுநில மன்னர்கள் அணியும் தலைப்பாகையுடன் ஒரு ஆண் தன் மனைவி யருடன் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னராக இருக்கலாம் அல்லது அனைவரா லும் மதிக்கும் நல்ல மனிதராக இருக்கலாம். இதனால் இவர்கள் இறந்த பின்னர் அவர்கள்  நினைவாக இந்நினைவு நடுகல் எடுக்கப்பட்டி ருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;