districts

img

‘வெற்றி உங்களுக்கே!’ நடைபயிற்சியின் போது தங்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் தூத்துக்குடி மக்கள் உறுதி

தூத்துக்குடி, மார்ச் 26- தூத்துக்குடியில் செவ்வாயன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சியின் போது மீனவர் கள், காய்கறி வியாபாரிகள், பொது மக்களிடம் வாக்கு சேர்த்தார். பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செவ்வாயன்று (26.3.2024) காலை யில் தூத்துக்குடி மாநகரில் நடை பயிற்சி மேற்கொண்டபடியே தூத் துக்குடி நாடாளுமன்றத் தொகுதி  திமுக வேட்பாளர் கனிமொழி  கருணாநிதிக்கு வாக்கு சேகரிக்கும் பணியையும் மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் தொ டங்கும் அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லோ ரும் சிறப்பாகத் தேர்வு எழுதி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியபடியே தூத்துக் குடி மாநகரில் காலையில் நடை பயிற்சிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு தம்மை எதிர்கொண்டு சந்தித்து வணக்கம் கூறிய மாணவ, மாணவிகளிடம் நன்றாகப் படித்து எதிர்காலத்தில் நீங்கள் எல்லாம் சிறந்து விளங்கவேண்டும் என வாழ்த்தினார்.

 அப்பொழுது முதல்வரைச் சந்தித்த மகளிர் குழுவினர் தாங்கள் செயல்படுத்தும் மகளிர் உரிமைத் திட்டம் எங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறது. நீங்கள் நல்லா இருக்கணும் என்று முதல்வரை வாழ்த்தினார்கள். அப்படியே மீனவ கிராமங்களில் சென்று நடைபயிற்சியோடு வாக்குச் சேகரித்தார் முதல்வர். அப்போது அன்போடு அவரை அழைத்த ஒரு மீனவர் இல்லத்திற்குச் சென்று அவர்கள் வழங்கிய தேநீரைப் பரு கியபடியே மீனவர்களின் நலனுக் காக தமது அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் நினைவு படுத்தினார்.

அது கேட்டு மகிழ்ந்த மீனவர்கள் உங்களுடைய கடுமையான முயற்சியினால் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்; உங்க ளால்தான், புதுதில்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என்று உறுதிபடக் கூறினார்கள். அத்துடன் 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அதிமுகவுக்கும், எங்கள் தூத்துக்குடி பகுதி அடைந்த வெள்ளப் பாதிப்பிற்கு ஒரு பைசா கூட நிதி வழங்காமல் வாக்குக் கேட்க வருகின்ற பாஜகவினருக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று கூறியது கேட்டு முதல்வரின் முகத்தில் புன்னகை அரும்பியது.

அடுத்து தூத்துக்குடி காய்கறிச் சந்தைக்குச் சென்றார். அங்கே அவரைக் கண்டதும் அங்கிருந்த காய்கறி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கடையில் காலிபிள வர் விற்ற மூதாட்டி முதல்வரை வணங்கி உங்களுக்கே எங்கள் ஆதரவு என்றார். காய்கறி கடை களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துச் சென்ற முதலமைச்சரை வியாபாரிகள் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வரவேற்றார்கள்.  

வெண்டைக்காய் கடை, பானி பூரி கடை, வெங்காயக் கடை முத லான பல்வேறு கடைகளுக்கும் சென்ற முதலமைச்சரை மகிழ்ச்சி யோடு வரவேற்ற வியாபாரிகள். வேட்பாளர் கனிமொழி கருணாநிதி யைக் காட்டி, அவர்களுக்கே எங்கள் வாக்கு; உங்களுக்கே என்றும் வெற்றி என்று கூறினர். லயன்ஸ் டவுன் மீனவ குடியிருப் பில் மீனவர்கள் எல்லாம் திரண்டு நின்று முதல்வரை வரவேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த நடைபயணத்தின் போது, வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.

;