districts

img

குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல்துறையினர் பெரம்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.18-  பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு துணை போகும் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்துறை அதிகாரிகளை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மாவட்டக் குழு உறுப்பினர் மார்க்ஸ், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கண்டன உரை யாற்றினர். சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் தேசத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்ட வர்கள் புகார் மனுகொடுத்தால் மனு  ரசீது கொடுப்பதில்லை. நேரடி விசா ரணை கூட இருப்பதில்லை.  மாறாக குற்றவாளிகள் தப்பிக்க அனைத்து வழி வகைகளையும் பெரம்பூர் காவல்துறை செய்து வரு கின்றது. சில புகார்கள் மீது கட்டப் பஞ்சாயத்து பேசி முடித்துள்ளது. வழக்கு பதிவு செய்ய நேரிட்டால் புகார்  மனு மீது உரிய வழக்கு பதிவு செய்வ தில்லை.  மேலும் காவல்நிலைய ஜாமீ னிலே குற்றவாளிகள் தப்பித்து செல்கி றார்கள் என ஆர்ப்பாட்டத்தில் முழக் கங்கள் எழுப்பப்பட்டன.

;