districts

img

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் கலை விழா

தஞ்சாவூர், மார்ச் 28- தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் கலை விழா நடைபெற்றது.  விழாவிற்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் மற்றும் ஆராய்ச்சி புலத்தலைவர் கோ.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிறப்பு விருந்தினராக ‘பார்க்கிங்’ மற்றும் டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மேதகு திரைப்பட கதாநாயகன் விஜய் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். பின்பு, மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

;