districts

img

மோடி தமிழகம் வருவது திமுக அணிக்கே சாதகம்!

தஞ்சாவூர், மார்ச் 26 -  பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரு வதால், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புதான் மேலும் மேலும் அதிக மாகி வருகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். 

தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது

பாஜக மூன்றாவது முறையும் ஆட்சி அமைத்தால், நாட்டிற்கே இதுதான் கடைசி தேர்தல் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை உள்ள மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே, இந்தத் தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி யின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்க ளின் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களான நாகா லாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநி லங்களில், தேர்தலில் நிற்பதற்குக் கூட பாஜகவுக்கு வேட்பாளர்கள் கிடைக்க வில்லை. அதனால், பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலை யில் இந்தியா கூட்டணி கட்சிகள் மிக வும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

எனது பிரச்சாரம் ஏப்ரல் 2 அன்று  தொடங்கி ஏப்ரல் 17 அன்று நிறைவடை கிறது. மோடியின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கைப் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். 

தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வ ளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வ ளவுக்கு அவ்வளவு திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு அதிகரிக் கிறது. திமுக கூட்டணி வெற்றி பெறு வதற்குத்தான் ஒவ்வொரு முறை வரும்போதும் பிரதமர் உரம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு கி. வீரமணி கூறியுள் ளார்.

;