districts

img

படைப்பு சுதந்திரத்தை பறிக்கும் சினிமாட்டோகிராபி சட்டத்தை கைவிடுக தமுஎகச வடசென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 12- படைப்பு சுதந்திரத்தை பறிக்கும் சினிமாட்டோகிராபி சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் வட சென்னை மாநாடு வலியுறுத்தி யுள்ளது. பெரம்பூரில் ஞாயிறன்று (ஜூன் 11) நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட துணைத்தலைவர் தளவை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி செயலாளர் டி.உதயா வரவேற்றார். உமாநந்தன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலா ளர் மணிநாத் வேலை அறிக்கை யையும், பொருளாளர் பா.ஹேமா வதி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். உதவிச் செயலா ளர் அ.பகத்சிங் பண்பாட்டு அறிக் கையை சமர்ப்பித்தார். மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
சினிமாட்டோகிராபி என்ற பெய ரில் படைப்பு சுதந்திரத்தை பறிக்கும்  முயற்சியை ஒன்றிய அரசு கைவிட  வேண்டும், தமிழக அரசு அமைக்க வுள்ள புத்தக பூங்காவை வட சென்னையில் அமைக்க வேண்டும். காகிதத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை 2 விழுக்காடாகக் குறைக்க வேண்டும். வடசென்னையில் கலை அரங்கங்கள் அமைக்க வேண்டும், தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும், இளம் படைப்பாளிகளின் கதைகளை தேர்வு செய்து அரசே திரைப்படங்களை தயாரிக்க வேண்டும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்க வேண்டும். கேரள அரசை போன்று தமிழக அரசும் ஓடிடி தளம் ஒன்றை தொடங்க வேண்டும். சென்னை நகர  சாலைகளுக்கு தமிழ் இலக்கிய ஆளு மைகளின் பெயர் சூட்டும் மாநகராட்சி யின் தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக தளவை ராஜேந்தி ரன், செயலாளராக மணிநாத், பொரு ளாளராக உமாநந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;