districts

மீன்பிடி துறைமுகத்தில் இயங்கும் கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தல்

சென்னை, பிப்.4- காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 30ஆண்டுகளாக இயங்கிவரும் சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றக்கூடாது என்று சென்னை -செங்கை மீன்பிடி தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் லோகநாதன் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசரை சந்தித்து மனு அளித்தார். அதில் 12 கடைகளை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு மீன் பிடித்துறைமுக நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறியுள்ளார். கடை களை அகற்றினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே சட்ட மன்ற உறுப்பினர் தலையிட்டு கடைகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கவேண்டும். ஒரு வேளை மீன்பிடித்துறைமுகத்திற்கு இடம்வேண்டும் என்றால் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு கடைகளை ஒதுக்கவேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடைகளுக்கு நிர்ணயிக்கப்படும் வாடகைகைய செலுத்த கடைகாரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் எனவே இந்த பிரச்சனையில் சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக தலையிடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

;