districts

திருச்சி முக்கிய செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்குக!

விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஏப்.30- அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட் டக் குழு கூட்டம் செவ்வாயன்று பெரம்ப லூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.  விதொச ஒன்றியச் செயலாளர் வீர சிங்கம் வரவேற்றார். மாவட்டத் தலை வர் அ.முருகேசன் தலைமை வகித்தார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், விதொச மாவட்டச் செயலாளர்  அ.கலையரசி ஆகியோர் விளக்க உரையாற்றினர். விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடப்பாண்டு தொடங்கி ஏழு மாதம் முடிவடைந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் வேலை  வழங்கவில்லை. வேலையின்மை மற்றும் வறட்சியால் வருமானம் இழந்து  கஷ்டப்படும் விவசாயக் கூலித் தொழி லாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அதோடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தினக்கூலி 319 ரூபாயை குறைக்காமல் வழங்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாகி வெப்ப அலை வீசிவரும் இக்காலத் தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட  தொழிலாளர்கள் பாதிக்காத வகையில்  காலை, மாலை என வேலை நேரத்தை  தீர்மானித்து செயல்படுத்த வேண்டும். பருவமழை மற்றும் இடைக்கால மழை யளவு 83 சதவீதமாக குறைந்துள்ள தால், பெரம்பலூர் மாவட்டத்தில் கடும்  வறட்சி நிலவுகிறது.  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ஏற்படுத்திய குளறுபடிகளை கலைந்து, வீடு கட்டும்  பயனாளிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கி, விரைவில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேர்தல் பிரச்சாரத்தில் தினமும் பிரதமர் மோடி சட்டமீறலில் ஈடுபடு வதை அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டக் குழு கண்டிக்கிறது. மேலும்  தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி  மீது பாரபட்சம் பார்க்காமல் வழக்குப்  பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பி.செல்வராஜ் நன்றி கூறினார்.

பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் பல்கலை.யில் சொற்பொழிவு 

தஞ்சாவூர், ஏப்.30-  பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆவது பிறந்தநாளை யொட்டி, பாவேந்தர் பாரதிதாசன் அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்றது.  மொழி பெயர்ப்புத்துறை ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ் விற்கு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். மொழி பெயர்ப்புத்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பழனி.அரங்கசாமி ‘பாரதிதாசன் செய்த கவி தைப்புரட்சி’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி னார்.  இதில், மன்னர் சரபோஜி கல்லூரி ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் லெ.பாஸ்கரன் ‘பாவேந்தர்  பாரதிதாசன் ஒரு சமூக விஞ்ஞானி’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மொழிபெயர்ப்புத்துறை இணைப்  பேராசிரியர் முனைவர் ப.இராஜேஷ் நோக்கவுரை வழங்கி னார். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தியாக ராஜன், வளர்தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.  முன்னதாக மொழிபெயர்ப்புத்துறை தலைவர் முனைவர் இரா.சு.முருகன் வரவேற்றார். துறை உதவிப்  பேராசிரியர் முனைவர் சா.விஜயராஜேஸ்வரி நன்றி கூறினார்.  தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா சிரியர் அரங்க.பாரி, பல்துறை மாணவர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு 

திருச்சிராப்பள்ளி, ஏப்.30- திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னி மங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி  மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். திங்களன்று வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு கோவில் பூசாரி தட்சி ணாமூர்த்தி வீட்டுக்குச் சென்று விட்டார். செவ்வாயன்று காலை வந்து பார்த்தபோது, கோவி லின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று  பார்த்ததில், இரண்டு உண்டியல்களையும் உடைத்து மர்ம  நபர்கள் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். மேலும், பீரோ வில் இருந்த 6 கிராம் தாலி, பொட்டு, வெள்ளிப் பொருட்கள், அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த மற்றும் சாத்தப்பட  இருந்த பழைய, புதிய பட்டுப் புடவைகள், கோவில் சாமான் களும் திருடு போயிருந்தன.  இதுகுறித்து கோவில் பூசாரி தட்சிணாமூர்த்தி, லால்குடி போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்போர்ட்டில் திருத்தம்:  திருச்சியில் ஒருவர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.30 - திருச்சி விமான நிலையத்தில் திங்களன்று குவைத் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயா ராக இருந்தது. அப்போது அதில் பயணம் செய்ய இருந்த  பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை  செய்தனர். இதில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதுகுளத்தூர் ரோட்டை சேர்ந்த ஒளிமுகமது (46) என்பவர் பாஸ்போர்ட்டில் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத் தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஒளி முகமதை கைது செய்தனர்.

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர்

பெரம்பலூர், ஏப்.30 - சமுதாய வளர்ச்சிக்கு சேவை யாற்றும் இளைஞர்களது பணியை  அங்கீகரிக்கும் பொருட்டு,  “முதல மைச்சர் மாநில இளைஞர் விருது”  ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான முதல மைச்சர் மாநில இளைஞர் விருது 15.8.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப் படவுள்ளது. இவ்விருது தொடர் பாக கீழ்க்காணும் தகுதிகள் வரை யறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரை யுள்ள ஆண்-பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்.1  அன்று 15 வயது நிரம்பியவராக வும், 2024 மார்ச் 31 அன்று, 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள் ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விரு திற்கு விண்ணப்பிக்கும் முன்பு 5  வருடங்கள் தமிழகத்தில் குடி யிருந்தவராக இருத்தல் வேண்டும்.  (சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.  அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடிய தாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய,  மாநில அரசுகள், பொதுத்துறை  நிறுவனங்கள், பல்கலைக்கழ கங்கள், கல்லூரிகள், பள்ளி களில் பணியாற்றுபவர்கள் இவ் விருதிற்கு விண்ணப்பிக்க இய லாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல் வாக்கு விருதிற்கான பரிசீலனை யில் கணக்கில் கொள்ளப்படும்.  விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் www.sdat.tn.gov.in  என்ற இணைய தளத்தில் உள்ளன.  விண்ணப்பத்தை 15.5.2024 மாலை  4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  இணையத்தில் சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்களின் நகல் கள் 3, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3, காவல் துறையிட மிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை 18.5.2024 மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.

உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் முறையை ரத்து செய்க!

மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம், ஏப்.30 - உதகை, கொடைக்கானல் செல்லும் வாக னங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் செல்வது உதகை மற்றும் கொடைக்கானலில் வசிக்கும் மலை வாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக் கையாக உள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் அங்கு  செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இத் திட்டம், இப்போது செயல்படுத்தப்பட்டால், உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்களுக்கு  மிகப்பெரும் நெருக்கடி ஏற்படும். இதனால்  உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்பு களைச் சந்திப்பர். அது அவர்களுக்குப்  பேரி ழப்பாக அமையும். மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள், மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். எனவே இதுகுறித்து தமிழக  அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து, இந்தப் புதிய கட்டுப்பாட்டி னை ரத்து செய்ய வேண்டும்.  இவ்விரு மலை தலங்களுக்கும் செல்லும்  வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தி, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரியமங்கலத்தில்  அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிப் படுகொலை

திருச்சிராப்பள்ளி, ஏப்.30 - திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் கேபிள்  சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராக வும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி  வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர், திருச்சி மாநக ராட்சியின் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் தொழில் மற்றும் பைனான்ஸ் செய்து வரு கின்றனர். பன்றியும் வளர்த்து வருகின்றனர். கேபிள்  சேகரின் மகன் முத்துக்குமார் (27) டிப்ளமோ இன்ஜினியர். பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள்  சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே  முன்விரோதம் தொடர்ந்து இருந்து வருகிறது. தொழில்  போட்டியில் ஏற்பட்ட தகராறில், கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன்  விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த  2011 ஆம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர்,  ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த  பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார்  கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோ தம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகன் சிலம்பரசன் (35), அவரது வீட்டின்  அருகே உள்ள காட்டுப் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக அரிமயமங்கலம் போலீசார்  வழக்குப் பதிந்து, கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை  தேடி வந்தனர். இந்நிலையில் திங்களன்று கரூர் ஜே.எம். -2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலை யில், திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த  முத்துகுமார்(28), அதே பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் அரியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவைச்  சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய  4 பேர் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர்கள் 4 பேரும்  கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாயன்று காலை சுமார் 11 மணியளவில், பட்டப்பகலில் முத்துக்குமார் சரமாரி யாக ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவரு டைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடினர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரிய மங்கலம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா  காட்சிகளை வைத்து போலீசார் முதல்கட்ட விசாரணையை  தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், தொழில்  போட்டி மற்றும் முன்  விரோதத்தில் இந்த கொலை நடந் துள்ளது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். இறந்து போன முத்துக்குமார் மீது கொலை வழக்கு,  அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

இயற்கை வாசனையுள்ள பழங்களை வாங்க அறிவுறுத்தல்

இராமநாதபுரம், ஏப்.30- இராமநாதபுரம் அரண்மனை சுற்றியுள்ள கடைகள் மற்றும் பவுண்ட் கடை தெரு இடங்களில் உள்ள கடைகளில்  மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.  ஆய்வின்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. இதில்  சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிக்காக  எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர்.   இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் :நுகர்வோர்கள் மாம்பழங்களை வாங்கும் போது இயற்கை யான வாசனை வருகின்ற பழங்களை வாங்க வேண்டும்  என்றும், வெளியில்  பழுத்து உள்ளே காயாக இருந்தால்  அதனை வாங்க வேண்டாம். செயற்கை முறையில் கல்  வைத்த மாம்பழம் என்றால் அந்த மாம்பலத்தில் அங்கங்கு  தீக்காயம் போல்  கருப்பாக காணப்படும்.  மாம்பழங்கள் ஒரே மாதிரியாக பழுத்திருந்தால் அந்தப் பழங்களில்  செயற்கை முறையில்  பழுக்க வைப்பதற்கு வாய்ப்பு கள் உள்ளன .  மாம்பழங்கள் கீழிருந்து மேலாகத்தான்  பழுத்திருக்க வேண்டும்.இதனை தெரிந்து கொண்டு மாம்பழங்களை நுகர்வோர்கள் வாங்க வேண்டும் .  மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருப்பதாகாக சந்தேகம் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.

குடிநீரை மாசுபடுத்தும் அபாயம் மேகமலை அருவியின் மேல்பகுதிக்குச் செல்ல தடை விதிக்க கோரிக்கை

கடமலைக்குண்டு,  ஏப்.30-  தேனி மாவட்டம், வருச நாடு அருகே கோம்பைத் தொழு கிராமத்தில் மேக மலை அருவி அமைந்துள் ளது. கடந்த சில மாதங்க ளாக மேகமலை வனப்பகுதி யில் மழை இல்லை. அதன் காரணமாக அருவியில் நீர்  வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தொடர்  வெயில் தாக்கம் காரணமாக தற்போது அருவியில் மிக குறைந்த அளவிலான நீர் வரத்து மட்டுமே உள்ளது. விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிப்பதற்கு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பய ணிகள் வருகை புரிந்தனர். ஆனால் அருவியில் நீர்  வரத்து இல்லாத காரணத் தால் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிலர் அருவியின் கீழ் பகுதி யில் குளம் போல தேங்கி யுள்ள நீரில் குளித்துவிட்டு சென்றனர்.  இந்நிலையில் தற்போது அருவியின் மேல் பகுதியில் மட்டும் லேசான அளவில் நீர்வரத்து உள்ளது. அந்த  இடத்தில் இருந்து மேக மலை, குமணன்தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த 52 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்  கீழ் குடிநீர் எடுத்துச்செல் லப்படுகிறது. எனவே சுற்  றுலா பயணிகள் அருவி யின் மேல் பகுதிக்கு சென்று  குளித்து குடிநீரை மாசு படுத்தும் அபாயம் உள்ளது. எனவே நீர்வரத்து  ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தற்காலிக தடை  விதிக்க வனத் துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை  கோரி வழக்கு

மதுரை, ஏப்.30- கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக் கத்தொகை  வழங்கக் கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடுக்கப்பட் டுள்ளது. விருதுநகர் துப்புரவு அரசு பணியாளர்கள்  சங்கம் சார்பாக  அன்னமயில் என்ப வர் உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் மனுவினைத் தாக் கல் செய்திருந்தார்.  அதில்,  “கொரோனா நோய் தொற்று காலத்தில் துப்புரவு பணியாளர்கள், ஒப்  பந்த பணியாளர்கள், காவல்  துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாக பணி செய்து வந்தனர். 2021 மே 28 அன்று தமிழக அரசு  அரசாணையை பிறப்பித்  தது. அதில்  2021  கோவிட்  நோய் தொற்று உச்சநிலை யில் இருந்த காலத்தில் பணி யாற்றிய துப்புரவு பணியா ளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயை ஊக்க தொகையாக வழங்  கப்படும் என அறிவித்தி ருந்தது. ஆனால் இன்றுவரை அதன் அடிப்படையில் யாருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனை வழங்கக் கோரி  அதிகாரிகளுக்கு பலமுறை  மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  ஆகவே தமிழக அர சின் அரசாணை அடிப்படை யில், துப்புரவு பணியாளர்  களுக்கு 15 ஆயிரம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட வேண் டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி மஞ்சுளா, கோவிட் தொற்று காலத்தில் பணியாற்றிய துப்புரவு பணி யாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக் கத்தொகை வழங்க கோரி மீண்டும் தனித்தனியே தமி ழக சுகாதாரத்துறை முதன்  மைச் செயலரிடம் மனு வழங்க வேண்டும். அதனை அவர் பரிசீலித்து உரிய முடி வெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


 

;