districts

img

திருப்பூர், மார்ச் 28- ஹிட்லரை போல ஆட்சிக்கு வந்த பாஜகவை, அதே தேர்தல் மூலம் விரட்டி அடிப்போம்!

திமுக தலைமையிலான இந்திய கூட் டணி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி  தலைமை தேர்தல் பணிமனையில் வியாழ னன்று, புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்த னர். அப்போது அவர்கள் கூறுகையில், நடக்க இருக்கும் தேர்தல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல, சிந் தாந்தத்திற்கு எதிராக நடக்கும் யுத்தம். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள  பாஜகவால் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்க ளும் பாஜக ஆட்சியில் பல்வேறு இன்னல் களை சந்தித்தனர். சிறுபான்மையினர், பட் டியில் வகுப்பினர், பழங்குடியினருக்கு எதி ராக பாஜக ஆளும் மாநிலங்களில் தாக்கு தல் நடத்தப்பட்டு வருகிறது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக  அழைத்து வரப்பட்ட செயல் நாட்டையே உலுக்கியது.  தேர்தலை முன்னிட்டு அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வரும் மோடி, ஒருமுறை கூட மணிப்பூருக்குப் போகவில்லை. நாடாளு மன்றத்தில் சிறுபான்மையினருக்கு எதி ராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதி முக, இப்போது சிறுபான்மையினர் வாக்கு களுக்காக பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டதாக நாடகம் ஆடு கிறது. தேர்தல் பரப்புரைகளில் மோடி குறித்தோ, பாஜக குறித்தோ ஒரு வார்த்தை  கூட பேசாமல், திமுக வெறுப்பை மட்டும் மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதேபோல திராவிட எதிர்ப்பு அரசி யலை செய்து வரும் நாம் தமிழர் கட்சி யும், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடித்து பாஜகவுக்கு உதவும் கட்சியே. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தி யாவும், தமிழ்நாடும் சுடுகாடாக மாறும்  அபாயம் உள்ளது. பாசிச ஹிட்லரை போல தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாஜகவை, அதே தேர்தல் மூலமே விரட்டி அடிப்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச பாஜக வையும், அதன் கள்ளக் கூட்டாளி அதிமுக வையும் வீழ்த்த திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி ஆதரவு அளிக்கிறது. மேலும்,  இக்கூட்டணிக்கு ஆதரவாக வீதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில், புரட்சி கர இளைஞர் முன்னணி திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி, மாநகர ஒருங் கிணைப்பாளர் தமிழமுதன், மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, மாண வர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜென்னி, தேர்தல் பணிக்குழு கதிரவன், கோவை  ஒருங்கிணைப்பாளர் ராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;