districts

img

வீடுகளை அகற்றும் முயற்சியை கைவிடுக அன்னை சத்யா நகர் மக்கள் ஆட்சியருக்கு கோரிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 30- கிருஷ்ணகிரி மாவட்டம், தேவ சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்டது  அன்னை சத்யா நகர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 10 குடும்பங்கள் உட்பட 45 குடும்பங்கள் இந்த பகுதியில் வீடுகள் கட்டி 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன.  இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலா னவர்கள் ஏழைகள். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளனர். மின் இணைப்பு, குடிநீர்  இணைப்பு ம் வழங்கப்பட்டுள்ளது.  வீட்டு வரி, குடிநீர் வரி,மின் கட்டணமும் செலுத்தி வருகின்றனர்.  இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியி ருப்புகளில் வசித்து வரும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி வீடுகளை காலி செய்து கொண்டு வெளியே றுமாறு பொதுப்பணித் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனால், மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதனயைடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பாதிக்கப்பட்ட மக்கள், “60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில் வீடுகளை காலி செய்ய சொல்வது சரியானது அல்ல என்றும்  இங்கிருந்து வெளி யேறுங்கள் என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது? எங்கு செல்வது? என்றும், வீடுகளை அகற்றப் போவதாக அச்சுறுத் துவதை  நிறுத்தி வைக்க வேண்டும் என்று பதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

;