court

img

2 டிஜி கொரோனா எதிர்ப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு... உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்...

சென்னை;
ராணுவ ஆராய்ச்சி -மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள 2 டிஜி கொரோனா மருந்தை உற்பத்தி செய்ய 40 நிறுவனங்கள் முன்வந்து ள்ளதாகவும் இந்நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடைபெறுவதாகவும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து, டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் அவசர காலப் பயன்பாட்டிற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம் எனவும், இதனால் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடிவதாகவும், நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.அனைத்து உருமாறிய வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.

இந்த மருந்தைச் சந்தைக்குக் கொண்டுவரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந் தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஒன்றிய அரசின் வழக்கறிஞர், “இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக ஒன்றிய 
அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன்” என்று பதில்அளித்தார்.இந்த வழக்கின் விசாரணை வெள்ளியன்று மீண்டும் நடைபெற்றது.  அப்போது ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “டி.ஆர்.டி.ஓ. எனும்ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியமருந்து உற்பத்தி நிறுவனங்களைக் கேட்டுள்ளோம், 40 நிறுவனங்கள்முன்வந்துள்ளன. அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.இந்த மருந்து எப்போது சந்தைக்குவரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, இதுகுறித்த விவரங்களை வழங்குவதாக ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 2 டிஜி மருந்து மூலம் 61வயது முதியவர் இரு நாட்களில் குணமடைந் துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.

                                 ******************

சர்வதேச மாபியாக்களால் ஆனந்தய்யா மருந்துக்கு அங்கீகாரம் இல்லை : நீதிபதிகள் கருத்து

இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி, அவரை சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அழைத்துப் பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.மேலும், சர்வதேச மருந்து மாஃபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் கூறினார். ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக ஒன்றிய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.இதையடுத்து 2 டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;