பேஸ்புக் உலா

img

ஆர்எஸ்எஸ் கருத்தியலை விமர்சிப்பதாக கூறி "ஜிப்ஸி" திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுப்பு?? 

குக்கூ மற்றும் ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூமுருகனின் அடுத்த படைப்பான ஜிப்ஸி படத்தில் ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட உருவாக்கம் முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. 
மேல்முறையீடு செய்தும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 

தற்போது படக்குழு மும்பை தணிக்கை தீர்ப்பாயத்தை அணுகியுள்ளதாக தெரிகிறது. தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதற்கு படத்தில் ஆர்எஸ்எஸ்-இன் வலதுசாரி கருத்தியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதே காரணமாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ராஜூமுருகனின் சமூகப் பற்றும் படைப்புச் சிந்தனையின் நேர்மையும் நாடறிந்தது. தனது ஜோக்கர் படத்தின் மூலம் அரசியல் மற்றும் சமூகத் தளத்தில் புரையோடிப்போன வறட்டு அதிகார, ஊழல் போக்கை தோலுரித்ததோடு, எளிய மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை தமது படைப்புகளின் வழியே தொடர்ந்து பேசி வருபவர். ஜோக்கர் படைப்புக்காக தேசிய விருதையும் பெற்றவர்.

நிஜமான கலைஞன் என்பவன் அதிகாரத்தை எதிர்த்து உண்மைகளைப் பேசுபவன். தோழர் ராஜூமுருகன் நிஜமான கலைஞன்..

படைப்புச் சுதந்திரத்தை பாதுகாப்போம்.. தோழர் ராஜூமுருகனுக்கு துணைநிற்போம்...

#Support_GYPSY

மார்க்சிஸ்ட் வந்தவாசி பதிவு

;