பேஸ்புக் உலா

img

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி?

விவசாயியைத்தான் இப்படிப் பாராட்டினார் எம்ஜிஆரின் விவசாயி படத்தில் பாடலை எழுதிய மருதகாசி. பிரதமர் மோடி மூன்று ஆண்டுகளுக்குப் பின் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி கொடுத்தார். உற்பத்திச் செலவில் 50 சதவீதம் சேர்த்துக் கொடுக்கப் படும் என்றார். இன்று விவசாயிகளின் நிலை என்ன? பிசினஸ்லைன் பத்திரிக்கையில் வந்த விவரங்களைப் பாருங்கள்:
1. உளுந்து, துவரை, கடலை போன்ற விவசாய விளை பொருட்களின் விலை மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட 15 முதல் 30 சதவீதம் வீழ்ந்து விட்டது.
2. விவசாய விளைபொருட்கள் சிலவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்திய போதிலும் அவற்றின் கொள்முதல் அளவு அதிகரிக்கவில்லை. நெல், ராகி, பச்சைப் பயறு, உளுந்து, கடலை, சோயாபீன்ஸ், கடுகெண்ணெய் ஆகியவவை குறைந்த பட்ச ஆதார விலையை விடக் குறைந்த விலைக்குத்தான் விற்கின்றன. உற்பத்தி அதிகரித்த போதிலும் பொருட்களை வாங்குவது (டிமாண்ட்) உயர வில்லை.
3. உயர்வேக டீசல், பூச்சிக் கொல்லிகள், டிராக்டர்கள், கால்நடைத் தீவனம், மின்சாரம் ஆகிய இடுபொருட்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.
வருமானம் இரட்டிப்பாவதற்குப் பதிலாக, மூன்று வருடங்களுக்கும் முன் இருந்த அளவிற்குப் போவது கூடக் கடினம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தியாவில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்பது இதுதானா பிரதமர் அவர்களே?

-Vijayasankar Ramachandran

;