தமிழகம்

img

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அலங்காநல்லூரில் நாளை கடையடைப்பு...

மதுரை 
கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி வரை மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு, பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்த காலகட்டத்தில் ஊரடங்கு பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் மாவட்டத்தின் வடக்கு பகுதியான அலங்காநல்லூரில் பகுதிக்கு குடிமகன்கள் படையெடுத்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் மதுரையை மாநகரை போல அலங்காநல்லூரிலும் கொரோனா பரவல் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து 3 டாஸ்மாக் கடை மற்றும் புதிதாக துவங்கப்படவுள்ள நவீன பார் ஆகியவற்றை நிரந்தமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் கிராம பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் இணைந்து வெள்ளியன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. 

;