திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தமிழகம்

img

பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி:
சாத்தான்குளத்தில் காவல்துறையின ரால் தாக்கப்பட்டு வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட  வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்  ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய5 பேரை  கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம்  தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் ஐந்து பேர், விசாரணைக் காக சிபிசிஐடி முன் ஆஜராகியுள்ளனர்.
 

;